KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்கு

Sunday, 20 November 2016


வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏனென்றால், வாட்ஸ்-ஆப் நிறுவனம் அதை அனுப்பவதில்லை. உங்களிடம் இருந்து விவரங்களை திருட நினைப்பவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கலாம்.


வாட்ஸ்-ஆப் நிறுவனம், கடந்த 15 ஆம் தேதி வீடியோ காலிங் வசதியை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்-ஆப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்த போது, அதை ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்திகளை அனுப்பியது. ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியை, அப்டேட் செய்தாலே போதுமானது.


வீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. காரணம், குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யும் பட்சத்தில், அது ஹேக்கர்களின் இணையதளத்துக்கு இட்டுச் சென்று, கடவுச்சொல் மற்றும் ஃபோனில் இருக்கும் பிற விஷங்களைத் திருடச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment

Popular Posts

 

உயர்க்கல்வி படிக்க ,வேலைவாய்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது கெசட்டட் ஆபீசர் கையெழுத்து தேவை இல்லை: தமிழக அரசு உத்தரவு

மாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு மற்றும் மத்திய, மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் கெசட்டட் ஆபீசர் (அரசு உயர் பதவியில் இருக...

Google+ Followers

Follow by Email

Most Reading

Read More