ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2016

ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு


சென்னை: ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தமிழகம் முழுவதும், 486 இ - சேவை மையங்களை அமைத்து, அரசு துறைகள் சார்ந்த சேவைகளை, வழங்கி வருகிறது.
கூடுதலாக, 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து, புதிதாக ஆதார் சேர்க்கை பணிகளை, மேற்கொண்டு வருகிறது.தற்போது, ஆதார் சேர்க்கைக்கு, அதிக மக்கள் வருவதால், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.
இதில், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' ஆக, சேர விரும்புவோர், www.tavtv.in இணையதளத்தில், வரும், 30ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களை, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Post Bottom Ad