Title of the document


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்துக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: சமூகவியல், உளவியல், சமூகப் பணி மாஸ்டர் பட்டம், மனநல நிறுவனங்கள் அல்லது சமூக சேவையில் மனநல ஆலோசகர் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: (அதிகபட்சமாக) எஸ்.சி. 40, எஸ்.டி. 40, பிற்படுத்தப்பட்டோர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 35, இதர பிரிவினர் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இதற்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை பிரிவு) புழல், சென்னை-66 என்ற முகவரியில் சேர்க்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04426590615 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post