வினாத்தாள் இல்லாமல் தேர்வு; ஆசிரியர்கள் அதிருப்தி. - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Tuesday, 22 November 2016

வினாத்தாள் இல்லாமல் தேர்வு; ஆசிரியர்கள் அதிருப்தி.


"மாணவர் கல்வித்தரத்தை உயர்த்த, தினமும் தேர்வு நடத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கேற்ப வினாத்தாள் வழங்காதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட தொடக்க கல்வித்துறையில் இருந்து, சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "தொடக்க, நடுநிலை பள்ளிகளில், தினமும் தேர்வு நடத்தி, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும். இத்தேர்வுக்கான வினாத் தாள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்படும். அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, 14ம் தேதியில் இருந்து, தினமும் ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு குறு மைய மையத்துக்கு
 ஒன்று வீதம் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது; ஒரு பள்ளியின் வினாத்தாளை மற்ற பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் "ஜெராக்ஸ்' எடுத்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ள நிலையில், ஒரு குறுமையத்துக்கு ஒரு வினாத்தாள் வழங்குவதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. சில ஆசிரியர்கள் கூறுகையில், "கல்வித்தரத்தை உயர்த்தும் முயற்சி வரவேற்கதக்கது; அதே நேரம், போதிய வினாத்தாள் வழங்காமல், ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்கினால், அதற்கான செலவை யார் ஏற்பது என்ற பிரச்னை எழுகிறது; மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு, அதற்கேற்ப வினாத்தாள் வழங்க வேண்டும்,' என்றனர்."

Post Bottom Ad