பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2016

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை

பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது. 'அந்த பெட்டியை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறக்க வேண்டும்; மாணவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், பல பள்ளிகளில், ஆசிரியர்களே திறந்து, புகார்களை படித்து விடுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மீது புகார் கூறியிருந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான புகார்கள், இப்போது பெட்டிகளில் குவிய துவங்கி உள்ளன.

இதையடுத்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: புகார் பெட்டிகளை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறந்து பார்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திறக்கக் கூடாது. பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வி அதிகாரிகள், இது குறித்து விசாரித்து, பெட்டியை வேறு யாராவது திறந்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Bottom Ad