8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை ஐடிஐ.யில் அலுவலக உதவியாளர் பணி - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 25 November 2016

8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை ஐடிஐ.யில் அலுவலக உதவியாளர் பணி


சென்னை திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானோர் டிச.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் தகுதியானோர் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படவுள்ளனர். அதனால் இப்பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பொதுப் பிரிவினராகவும் இருப்பது அவசியம். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.
இப்பணியை விரும்புவோர் தங்களது சாதி, முன் அனுபவம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் ""பயிற்சி கண்காணிப்பாளர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர் வளாகம்), கிண்டி, சென்னை'' என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாகவோ டிச.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது தொடர்பாக 044-22504990 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று பயனடையலாம் என அவர் கூறியுள்ளார்.

Post Bottom Ad