பெங்களூரில் நவ.7-இல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 4 November 2016

பெங்களூரில் நவ.7-இல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்


பெங்களூரில் நவ.7-ஆம் தேதி ராணுவப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு, பென்சன்டவுன், இந்தர்கில் லைன்ஸ், துணை தரைப்படை அலுவலகத்தில் நவ.7-ஆம் தேதி காலை 5 மணி முதல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. பொது ராணுவ வீரர், ராணுவ வீரர்-தொழில்நுட்பர் (கருவிகளைப் பழுது பார்ப்போர், வீட்டை தூய்மையாக வைத்திருப்போர்) போன்ற பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த முகாமில் கர்நாடகம், ஆந்திரம், குஜராத், கோவா, கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
18 முதல் 42 வயதுக்குள்பட்ட 160 செமீ உயரம், 77 செமீ மார்பளவு, 50 கிலோ எடை கொண்டவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
அரசு, அரசுசார், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயதொழில் செய்வோரும் முகாமில் பங்கேற்கலாம்.
நவ.7-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் துணை தரைப் படை அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் வந்து சேர வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள், அசல் கல்வி, குடியிருப்பு, ஜாதி, நன்னடத்தை சான்றிதழ்கள் மற்றும் 12 பாஸ்போர்ட் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆள்சேர்ப்பு அலுவலகம், மத்திய ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவு, பெங்களூரு-560025 என்ற முகவரியிலோ அல்லது 080-23333065 என்ற தொலைபேசி மற்றும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Bottom Ad