ரூ.6000 கோடி கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த குஜராத் வைர வியாபாரி

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர். வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி வைத்திருந்த நபர்கள் அரசிடம் சிக்கி வருகிறார்கள்.

நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம், தேவையான பணத்தினை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள போதிலும், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லை.

இதனால் மக்கள் அனைவரும் 100 ரூபாய் நோட்டுகளுக்காக வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.இன்று முதல் சென்னை ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க தொடங்கின. 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார்.

இந்த தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.

தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

Popular Posts