*குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை* - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Sunday, 6 November 2016

*குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை*தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மையங்களில், 15 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:
மாணவர்களை தவிர, அவர்களின் உறவினர், பெற்றோர் என, வேறு யாருக்கும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி இல்லை
மொபைல் போன், கணினி சாதனங்கள், 'கால்குலேட்டர், ஸ்மார்ட் நோட் புக்ஸ், ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் மோதிரம், கைப்பை உள்ளிட்ட பொருட்கள், தேர்வறையில் அனுமதிக்கப்படாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Post Bottom Ad