பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்: ‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் ஓவியப் போட்டி - முதல் சுற்றுக்கான கடைசி தேதி நவம்பர் 25 - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2016

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்: ‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் ஓவியப் போட்டி - முதல் சுற்றுக்கான கடைசி தேதி நவம்பர் 25‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘யங் வேர்ல்டு’ இணைப்பிதழ் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுவது வழக் கம். 2016-17ம் ஆண்டுக்கான போட்டி களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்போட்டி யில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் www.thehindu.com/ywpainting என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது விவரங்களைப் பதிவு செய்து, முன்பதிவு செய்துகொள்ள லாம். முன்பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே அடை யாள எண் அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.7 முதல் 9-ம் வகுப்பு வரை சீனியர் பிரிவிலும், 4 முதல் 6-ம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவிலும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளுக்கான தலைப்புகள் மேற் கண்ட இணையதளத்தில் உள்ளன.மாணவர்கள் 26x27 செ.மீ. அளவு தாளில் படங்களை வரைய வேண்டும்.

முன்பதிவின்போது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட அடையாள எண்ணை, ஓவியம் வரையப்பட்ட தாளின் வலது மேல் ஓரத்தில் குறிப்பிட வேண்டும். ஓவி யம் வரையப்பட்ட தாளின் பின்பக்கத் தில், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, வீட்டு முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். ஓவியங்களுக்கு பள்ளி முதல்வர் அல்லது ஓவிய ஆசிரி யரிடம்சான்று பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு தகவல் விடுபட்டாலும், சம் பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பம் ஏற்கப்படாது.ஓவியம் வரையப்பட்ட தாளை மடிக் காமல், அருகில் உள்ள ‘தி இந்து’ அலு வலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஓவியத்துக்கு இடப்படும் உறையின் மேல்புறத்தில் ‘THE HINDU YOUNG WORLD PAINTING COMPETITION 2016-17’ என்று குறிப்பிட வேண்டும். ஓவியங்கள் வந்து சேருவதற்கான கடைசி தேதி நவம்பர் 25.

இறுதிப் போட்டிக்கான இடம், நாள் குறித்த தகவல் மின்னஞ்சல், குறுஞ் செய்தி வாயிலாக தெரியப்படுத்தப் படும். இறுதிப் போட்டிக்கான இடங்கள் மற்றும் போட்டி குறித்த கூடுதல் விவரங் களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை, சான் றிதழ் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் கள் வழங்கப்படும்.

Post Bottom Ad