ரூ.2.5 லட்சத்திற்கு மேல் 'டிபாசிட்' செய்தவர்களுக்கு... நோட்டீஸ்! - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2016

ரூ.2.5 லட்சத்திற்கு மேல் 'டிபாசிட்' செய்தவர்களுக்கு... நோட்டீஸ்!

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது' என, மத்திய அரசு அறிவித்த பின், தங்கள் வங்கிக் கணக்குகளில், திடீரென அதிகளவில் பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

இதனால், கறுப்புப் பண முதலைகளின் பணத்தை, கமிஷனுக்காக, தங்களது கணக்கில் டிபாசிட் செய்து உதவியோர் பீதியடைந்து
உள்ளனர்.

போலி ரூபாய்

நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும்,
கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கி லும், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என,நவ., 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற, டிச., 30 வரை, அவ காசம் அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கிகளை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை பணப் பரிவர்த்தனை எது வும் செய்யாத வங்கிக் கணக்குகளில், பல லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது, வங்கிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

அத்து டன், பல வங்கிக் கணக்குகளில், வழக்கத் திற்கு மாறாக, மிக அதிக மான தொகை டிபாசிட் செய்யப் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சந்தேகத்திற்கு இடமான இத்தகையடிபாசிட்டுகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள், நேரில் ஆஜராகி
விளக்கம் அளிக்கும்படி, வருமான வரித்துறை, நோட் டீஸ் அனுப்ப துவங்கியுள்ளது. நோட் டீஸ் பெற்றவர்கள், பணத்திற்கான ஆதாரங் கள், ரசீதுகள் மற்றும் ஆவணங்களுடன், வருமான வரித் துறையினரை சந்தித்து, கணக்கு புத்தகங் களை தாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப் படுகிறது.

'கடந்த இரு ஆண்டு களாக தாக்கல் செய்த, வருமான வரி கணக்கு நகல்களையும், கையோடு கொண்டு வர வேண் டும்' என, வங்கி வாடிக்கையாளர்களுக்கு விடுத்து உள்ள, நோட்டீசில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'திடீரென வங்கிக் கணக் கில்,அதிகளவு டிபாசிட் செய்திருந்தாலும், அந்த பணத்திற்கு முறையாக கணக்குகாண்பிப்போர், வருமான வரிதுறை நோட்டீஸ் குறித்து அச்சப் பட தேவையில்லை' என்றார்.

எனினும், வருமான வரிதுறையின் நோட்டீஸ், கறுப்புப் பணத்தை, வெள்ளையாக மாற்ற
உதவிய அப்பாவி பொதுமக்கள் பலருக்கு, 'கிலி'யை ஏற்படுத்தி உள்ளது.

Post Bottom Ad