Title of the document


தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தகவல்அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங் கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று தமி ழக அஞ்சல் வட்ட தலைமை அதிகாரி சார்லஸ் லோபோ கூறினார்.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று முதல் வங்கிகளில் ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய அறிவிப்பு நேற்று வெளியானது.இந்நிலையில், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை ஒரு நபர் பணம் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி சார்லஸ் லோபோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:அஞ்சலகங்களில் பணம் மாற்ற வருவோரிடம் சேமிப்புக் கணக்கு தொடங்க கட்டாயப்படுத்தப்படுவ தாக புகார் எழுந்துள்ளது. அது உண்மை இல்லை. ஆனால், சேமிப்புக் கணக்கு தொடங்கினால், பொதுமக்கள் அதனால் பயனடைய முடியும். ஒருவர் சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது ரூ.50 ஆயிரம் வரை பணம் செலுத்த முடியும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்த பான் கார்டு, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களை கொடுக்க வேண்டும். அதே போல், ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்க முடியும். சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது பழைய 500, மற்றும் 1,000 நோட்டுகளை கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post