Title of the document


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மூன்று பள்ளி கட்டடங்கள், அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வன்முறை: ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 9 முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு, 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இன்னும் முழு அளவில் செயல்படவில்லை. 3 பள்ளிகளுக்கு தீ: இந்நிலையில், பள்ளிகளை தொடர்ந்து முடக்கும் விதமாக, பள்ளி கட்டடங்களுக்கு, பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள், தீ வைத்து வருகின்றனர்; கடந்த சில நாட்களில், 20க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. அனந்தநாக் பகுதியில், நேற்று ஒரே நாளில், மூன்று பள்ளி கட்டடங்களுக்கு, அடுத்தடுத்து தீ வைக்கப்பட்டது; இதில், அந்த கட்டடங்கள் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post