Title of the document


உலகின் இண்டர்நெட்டை பயன்படுத்தும் அனைவருமே கிட்டத்தட்டை ஜிமெயில்அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள். எத்தனை மெயில் வைத்திருந்தாலும் ஜிமெயில் வைத்திருப்பது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கெளரவ பிரச்சனை ஆகும்.

இந்நிலையில் இந்த ஜிமெயிலை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க தற்போது ஒருசில வழிமுறைகளை பார்ப்போம். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் உங்கள் ஜிமெயில் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.,

   

ஹேக்கிங் செய்யப்பட்ட மெயில்களை அறிந்து கொள்வது எப்படி?

நீங்கள் கூகுள் குரோம் பிரெளசரை பயன்படுத்துபவராக இருந்தால் அக்ளி இமெயிலை வெப்ஸ்டோரில் கண்டு பிடித்து அதை குரோம் பிரெளசருடன் இணைக்க வேண்டும். இந்த முயற்சி உங்களுடைய ஹேக்கிங் மெயிலை கண்டுபிடிக்க உதவும். கூகுள் குரோமில் இதை இணைத்தவுடன் நீங்கள் ஜிமெயிலை ஆன் செய்தால் ஹேக்கிங் செய்யப்பட்ட மெயில்கள் அருகே 'கண்' போன்ற ஒரு அடையாளம் தெரியும். இதை வைத்து உங்கள் மெயில் ஹேக் செய்யப்பட்டதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

  

ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வெரிபிகேஷன் ஸ்டெப் மிக முக்கியம்

ஜிமெயிலை சிறந்த முறையில் பாதுகாப்பதற்காகவே கூகுள் வெரிபிகேஷன் என்ற ஆப்சனை வைத்துள்ளது. இதன் மூலம் ஹேக்கிங் மட்டுமின்றி பல விதங்களிலும் உங்களுடைய ஜிமெயிலை பாதுகாத்து கொள்ள வேண்டும். முதலில் உங்கள் அக்கவுண்ட்டை இன்னொரு டிவைஸ் மூலம் வெரிபிகேஷன் செய்ய வேண்டும். வெரிபிகேஷன் செய்ய மொபைல் எஸ்.எம்.எச் அல்லது இன்னொரு ஜிமெயிலில் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதை செய்துவிட்டால் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை யாராவது ஹேக் செய்ய முயற்சி செய்தால் கண்டிப்பாக செக்யூரிட்டி கோட்-ஐ செகண்டரி டிவைஸ் மூலம் கேட்கும். இந்த ஸ்டெப்பை தாண்டாமல் ஹேக்கர் உங்கள் ஜிமெயிலை ஹேக் செய்ய முடியாது.

ஸ்பேம் மெயில்களை முற்றிலும் தவிர்க்கவும்

ஹெக்கர்கள் நம்முடைய ஜிமெயில் அக்கவுண்டை தன்வசப்படுத்த பயன்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்பேம் மெயில்களை அனுப்பி அதில் உள்ள வைரஸ்கள் மூலம் நம்முடைய ஜிமெயில் அக்கவுண்டை ஹேக் செய்வதுதான். உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது, உங்கள் பணம் உங்களுக்காக காத்திருக்கின்றது' போன்ற அலங்கார வார்த்தைகள் அடங்கிய மெயில் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு அந்த மெயிலை டெலிட் செய்துவிடுங்கள். தயவுசெய்து எந்த காரணத்தை முன்னிட்டும் அதை ஓபன் செய்ய வேண்டாம்

   

காண்டாக்ட் நம்பரை அப்டேட் செய்து கொண்டே இருங்கள்

அதிக நாட்கள் பயன்படுத்திய மொபைல் எண்ணை ஒருவேளை மாற்றும் நிலை ஏற்பட்டால் உடனே உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட், சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் போன்ற முக்கியமான தளங்களில் அப்டேட் செய்யுங்கள். ஏனெனில் வெரிபிகேஷன் செய்யப்படும்போது உங்கள் பழைய மொபைல் எண்ணுக்கு செக்யூரிட்டி கோட் வந்தால் உங்களால் அதை பெற முடியாத நிலை ஏற்படும்.

   

ரிகவரி இமெயில் ரொம்ப முக்கியம்

உங்கள் மொபைல் எண்ணை அவ்வப்போது அப்டேட் செய்வது போல் ரெகவரி இமெயிலும் மிகவும் அவசியம். ஜிமெயில் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்யும்போதே ரிகவரி மெயில் என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்கள் ரிகவரி மெயிலை நீங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ, செக்யூரிட்டி கோட்களை பெற வேண்டும் என்றாலோ இந்த செகண்டரி இமெயில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post