Title of the document


குவான்டன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
ஆண்களுக்கான 4வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வருகிறது
இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல்கோலை இந்திய அணி அடித்து அசத்தியது.
தொடர்ந்து அதே வேகத்தில் இரண்டாவது கோலையும் இந்திய அணி அடித்தது. ஆனால் சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தது. இதனையடுத்து இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில், இந்திய அணி தனது 3வது கோலை அடித்தது.
தொடர்ந்து பாகிஸ்தான் அணியால் கோல் எதுவும் போடமுடியவில்லை. ஆட்டத்தின் நான்காவது கால் பாதி ஆட்டம் வரை பாகிஸ்தான் அணி 3வது கோலை போட முடியாததால் 3 - 2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது.
இதன் மூலம் இந்திய அணி 3வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post