Title of the document



சத்துணவு ஊழியர்களுக்கு அரசாணை இருந்தும், பல மாவட்டங்களில், ஆண்டு ஊதிய உயர்வு, கூடுதல் படி வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 42 ஆயிரத்து, 423 அமைப்பாளர்; 42 ஆயிரத்து , 855 சமையலர்; ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 130 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு அமைப்பாளர் இரண்டுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிக்கிறார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், ஒரு அமைப்பாளர், ஏழு மையங்களை கவனிக்கிறார். பல மையங்களில், ஒரு சமையலர் அல்லது உதவியாளர் மட்டுமே உள்ளனர்.
கூடுதல் மையங்களை கவனிக்கும் அமைப்பாளர்களுக்கு தினமும் கூடுதல் படியாக, 20 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல், ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதம் வழங்க வேண்டும். இதற்கான அரசாணை இருந்தும் பல ஒன்றியங்களில் வழங்கவில்லை. சிவகங்கை நகராட்சியில், பொங்கல் போனஸ் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ' எங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளும் பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் வேளை பளுவால் எங்கள் பிரச்னையை கண்டுகொள்வதில்லை. தனியாக துறை அதிகாரிகளை நியமித்தால் தான் எங்கள் பிரச்னை தீரும்' என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post