Title of the document

'ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி., பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது. இது குறித்து, தமிழ்நாடு வட்ட மற்றும் சென்னை வட்ட பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே, திட்டத்தின் நோக்கம். அதனால் தான், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் - 249' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, தரைவழி கேபிள் மூலம் தரப்படும், 'பிராட்பேண்ட், இன்டர்நெட்' இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளர்கள், 300 ஜி.பி., வரை, இலவச டேட்டா பயன்படுத்தலாம். இதை கணக்கிட்டால், வாடிக்கையாளர்களுக்கு, ஒரு, ஜி.பி., ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் விபரங்களை, 1800 345 1500 என்ற, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் www.bsnl.co.in இணையதள முகவரி மூலம் அறியலாம்.
சென்னை வட்டத்தில், 6.5 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்; அதில், மூன்று லட்சம் பேர் மட்டுமே, பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளனர். புதிய சலுகை திட்டத்தை பயன்படுத்தி, மீதம் உள்ளவர்களையும், 'பிராட்பேண்ட்' வாடிக்கையாளராக மாற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post