Title of the document

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.அதேபோல், 150
மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.

 ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடக்கும் போது, ஆசிரியர் - மாணவர் விகிதப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர்களை, கட்டாய பணி மாற்றம் செய்வர்; இந்த பணி நிரவல், அரசு பள்ளிகளுக்கு மட்டும் உண்டு. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் ஊதியம் மற்றும் சலுகைகள் பெறும் ஆசிரியர்கள் பலர், மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்; ஆனால், இவர்களுக்கு கட்டாய பணி மாறுதல் கிடையாது. எனவே, அரசின் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பலர், பணியில்லாமல், வெறுமனே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. அரசு நிதி விரயமாவதை தடுக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும், கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post