Title of the document


சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது.
தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post